மண்வெட்டியை எப்படி புடிக்கணும் தெரியுமா..! செய்து காட்டிய அமைச்சர்

Update: 2024-10-20 02:28 GMT

மண்வெட்டியை எப்படி புடிக்கணும் தெரியுமா..! செய்து காட்டிய அமைச்சர் 

சிதம்பரம் அருகே நடந்த அரசு விழாவில், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மண்வெட்டியை வாங்கி வெட்டி காண்பித்தது பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கூடுவெளிசாவடி கிராமத்தில் நடந்த ஊராட்சி கட்டிட திறப்பு விழாவில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். தொடர்ந்து, அங்கு மரக்கன்று நடுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். மரக்கன்று நட வந்த அமைச்சர், மரக்கன்று நட ஆழம் போதவில்லை என அருகில் இருந்த திமுக நிர்வாகியும் விவசாயியுமான பாலு என்பவரை ஆழப்படுத்த சொன்னார். அவர் சரியாக வெட்டாததால் பச்சை துண்டை போட்டு விவசாயம் செய்ற..... ஆனால் வெட்ட தெரியவில்லையா... என கேட்டு மண்வெட்டியை கையில் வாங்கி வெட்டிக் காண்பித்தார். முன்னதாக அங்கு நின்றிருந்த ஏழை பெண் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து பாசத்தோடு பேசினார். அமைச்சரின் இந்த செயல்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்