தீபாவளி முடிந்த மறுநாள் சொந்த வீட்டுக்குள்ளேயே தூங்க முடியாத மக்கள்.. சோகம்
திருப்பூர் ஜம்மனை ஓடை கரைகள் உடைந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் ஓடையில் அடைப்புகள் அகற்றப்பட்டதால் வெள்ள நீர் வடிந்தது. சம்பவ இடத்திற்கு வந்து கவுன்சிலர் கொறடா அன்பகம் திருப்பதி, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஓடையில் நீர் செல்லக்கூடிய வழிப்பாதை குப்பைகளால் அடைபட்டது கண்டுபிடிக்கப்பட்டு அடைப்புகள் அகற்றப்பட்டன... இதனால் சாலைகளில் ஓடிய வெள்ள நீர் வடிந்தது... தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் உத்தரவிட்டனர்.