#BREAKING || "அவ்ளோதான்.. முடிச்சு விட்டீங்க போங்க.." ரயில் பயணிகளுக்கு பேரதிர்ச்சி

Update: 2024-10-23 03:34 GMT

#BREAKING || "அவ்ளோதான்.. முடிச்சு விட்டீங்க போங்க.." ரயில் பயணிகளுக்கு பேரதிர்ச்சி

அக்டோபர் 31 நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் ‌ சொந்த ஊர் செல்லும் பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் 7க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளது ....

இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு துவங்கியுள்ளது ‌..

தீபாவளி பண்டிகையொட்டி ஏராளமான பயணிகள் சொந்த ஊர் செல்ல திட்டம்.

வழக்கமாக இயக்கப்படும் விரைவு ரயில்களின் முன்பதிவு முழுமையாக விற்று தீர்ந்தது ...

இந்நிலையில் பயணிகள் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் 29ஆம் தேதியும் மறு மார்க்கத்தில் நவம்பர் 5ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்ட்ரலுக்கும் சிறப்புரயில் இயக்கம்

இதேபோல் சென்னை சென்ட்ரல் செங்கோட்டை , சென்னை சென்ட்ரல் மங்களூரு , தாம்பரம் கன்னியாகுமரி , கொச்சுவேலி பெங்களூரு , எழும்பூர் பெங்களூரு , எஸ்வந்த்பூர் மங்களூரு என பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம் ..

தற்போது எழும்பூர் சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் முன்பதிவு மையங்களில் டிக்கெட் முன்பதிவிற்காக ஏராளமானோர் வருகை ...

ஐ ஆர் சி டி சி இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்பதால் பயணிகள் எளிமையாக ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் எடுக்கவும் ஆர்வம் ..

Tags:    

மேலும் செய்திகள்