சிறுவன் கையில் கிடைத்த பொக்கிஷம் - வியந்து பார்த்த மக்கள்
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே, சிறுவன் பறித்து வந்த ராட்சத காளானை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர். செங்குளத்துப்பட்டியை சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் கவின், ஒன்றரை அடி உயரத்திற்கு ராட்சத காளானை பறித்து வீட்டிற்கு கொண்டு சென்றார். பொதுவாக காளான்கள் சிறிய அளவிலேயே இருக்கும் நிலையில், அப்பகுதி மக்கள், ராட்சத காளானை ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.