பிரதமர் குறித்து அவதூறு பேச்சு... அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு
பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள தண்டபத்து பகுதியில் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற திமுக நாடாளுமன்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடியை இழிவுபடுத்தி பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் அளித்த புகாரின்பேரில், மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது