உயிரிழந்த இஸ்ரோ வர்ணனையாளர்...வளர்மதி ஆசைப்படி செய்யப்பட்ட கடைசி மரியாதை | ISRO | Tamilnadu
இஸ்ரோவில் வர்ணனையாளராக பணியாற்றி பெருமை சேர்ந்த, தமிழகத்தை சேர்ந்த வளர்மதி, உடலநலக்குறைவால் சமீபத்தில் காலமானார். இந்நிலையில் வளர்மதியின் கணவர் முத்தையனின் சொந்த ஊரான, தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடியில், வளர்மதிக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். வளர்மதியின் உருவப்படத்தை ஏந்திக்கொண்டு, மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து பேசிய முத்தையன், வளர்மதியின் விருப்பப்படியே அவரது சொந்த ஊரான திருச்சியில் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.