கடலூரில் 50 சதவீதம் குப்பை வாகனங்கள் இல்லாததால் மாநகராட்சி மேயர், ஆணையர் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.கடலூர் மஞ்சைநகர் திடலில் குப்பை அள்ளும் வாகனங்களின் நிலை குறித்து மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த குப்பை வாகனங்களின் நிலை காயிலாங்கடைக்கு அனுப்பும் வகையில் மிகவும் மோசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மேயர், சரமாரியாக கேள்வி எழுப்பினார். 50 சதவீத குப்பை வாகனங்கள் ஆய்வின் போது இடம்பெறாதது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேள்வி எழுப்பிய கடலூர் மேயர், இரண்டு நாட்களுக்குள் அனைத்து வாகனங்களும் வந்து சேர வேண்டும் என உத்தரவிட்டார். குறிப்பிட்ட நேரத்தில் குப்பை அள்ள வேண்டும், கழிவுநீர் வாய்க்கால்களை சுத்தப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல அறிவுறுத்தல்களை மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்கினார்.