கொரோனா தடுப்பூசி போட்டவர்களே குலைநடுங்க வைக்கும் ஒரு உண்மை.. தயாரித்த நிறுவனமே ஒப்புதல் வாக்குமூலம்

Update: 2024-04-30 07:37 GMT

கொரோனா பரவலின் போது ஆஸ்ட்ராஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட், இந்தியாவின் சீரம் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு நாட்டில் பரவலாக விநியோகிக்கப்பட்டது... ஏராளமான மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியால் உயிரிழப்புகள், பக்க விளைவுகள் ஏற்படுவதாக இங்கிலாந்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன... இந்நிலையில் தான் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம், தங்கள் தடுப்பூசியால் அரிதான சந்தர்ப்பங்களில் ரத்த உறைவு ஏற்படும் என்றும், இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையைக் குறைக்கும் என்றும் நீதிமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... இதன் மூலம் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வாய்ப்புள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்