மீண்டும் பயத்தை கிளப்பிய குற்றாலம்.. பேய் போல் மாறிய பயங்கர காட்சிகள்

Update: 2024-07-30 04:55 GMT

குற்றாலம் மெயின் அருவியில் பெய்த கனமழையால் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. தொடர் மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இரவில் பெய்த கனமழையால் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பேய் போல் தண்ணீர் கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்