கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், உக்கடம், காந்திபுரம், பீளமேடு, புலியகுளம், பாப்பநாயக்கன் பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது.