புயலை மீறி கடலுக்கு சென்ற 6 பேர்..தமிழகத்தை பதறவிட்ட திக்..திக்.. ஆக்ரோஷமாக பொங்கிய அலைகள் - சவாலை மீறி காப்பாற்றியது எப்படி?

Update: 2024-11-29 03:27 GMT

தைக்கால் தோணித்துறை கிராமத்தை சேர்ந்த 6 மீனவர்கள் கடலுக்குள் சிக்கி போராடி வந்த நிலையில், கடலோர காவல்படை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் தைக்கால்தோணித் துறை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் 6 பேர், இரண்டு நாள் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன் கடல் சீற்றம் காரணமாக படகு விபத்தில் சிக்கிய தினேஷ், மணி மாறன், சற்குணம், தமிழ்வாணன் உள்ளிட்ட ஆறு மீனவர்களும் சிப்காட் தொழிற்சாலைக்கு சொந்தமான சிறிய இறங்கு தளத்தில் தஞ்சம் அடைந்தனர். அங்கிருந்த நான்கு காவலர்களும், மீனவர்களுக்கு பாதுகாப்பு அளித்து உணவு வழங்கி பாதுகாத்தனர். தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில் குமார் தலைமைச் செயலருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டர் மூலமாக மீனவர்களை மீட்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் மீனவர்கள் தஞ்சமடைந்திருந்த இறங்கு தளத்திற்கு சென்ற ஹெலிகாப்டர், முதலில் தமிழ்வாணன், சாமிதுரை, மணிமாறன் ஆகிய மூவரையும் மீட்டு வந்தது. பின்னர் தினேஷ், சற்குணன், மணி மாறன் உள்ளிட்டவர்களை மீட்டது. இறுதியாக நான்கு பாதுகாவலர்களும் அங்கிருந்து மீட்கப்பட்டனர். கரைக்கு வந்த மீனவர்களை நலம் விசாரித்த ஆட்சியர்,இனி கடல் சீற்றமாக இருக்கும் வேளையில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 10 பேருக்கும் முறையான பரிசோதனைகள் செய்யப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்