காஞ்சிபுரம் வந்த மத்திய கல்வித்துறை அமைச்சர் - மாணவர்களுக்கு சொன்ன அட்வைஸ் | Kanchipuram

Update: 2024-11-29 03:06 GMT

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இருந்து சமஸ்கிருதம் எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட எழுத்து முறையே, கிரந்தம் என, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீ சங்கரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உள்ள பழங்கால ஓலைச்சுவடி பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தினை பார்வையிட்டு ஓலைச்சுவடிகள் குறித்து கேட்டறிந்தார். அங்கு, மாணவர்களின் ஓவிய கலைத்திறன் படைப்புகளை பார்வையிட்டு வாழ்த்து தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்களிடையே உரையாற்றிய அமைச்சர், தொடர்ந்து கற்றல் மூலமே புதிய நிகழ்வுகள் மற்றும் பாரம்பரியம் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ள முடியும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்