திருவாரூர் மாவட்டம் தொண்டியக்காடு பகுதியில், கனமழையால் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பரப்பளவில் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். உடனடியாக அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பயிர்களை கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.