“யூடியூப்பில் லைக் போட்டால் பணம் கொட்டும்“ - ரூ.13.58 லட்சம்.. மிரண்ட ஈரோட்டு பெண்
ஈரோட்டில் டெலிகிராம் மூலம் பெண்ணிடம் 13 லட்ச ரூபாய் மோசடி செய்த 2 பேரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். டெலிகிராம் செயலி வாயிலாக அந்தப் பெண்ணை அணுகி, யூடியூப் விளம்பரங்களுக்கு லைக் போடுவது, ரிவ்யூ கொடுப்பது தொடர்பான வேலை இருப்பதாக கூறி மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், கோவையை சேர்ந்த சஞ்சய், ராம்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 வங்கி கணக்கு புத்தகங்கள், 24 காசோலை புத்தகங்கள் மற்றும் ஏராளமான சிம்கார்டுகள், செல்போன்களை பறிமுதல் செய்தனர்.