முன்னாள் நிர்வாகி மீது பாயும் அடுக்கடுக்கான புகார்கள்.. "இரவில் சென்ற போது மிரட்டினார்கள்"
முன்னாள் நிர்வாகி மீது பாயும் அடுக்கடுக்கான புகார்கள்.. "இரவில் சென்ற போது கத்தியை வைத்து மிரட்டினார்கள்"
#thanthitv
திருச்சியில் ரவுடிகளும், அரசியல்வாதிகளும் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதாக திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடந்த ரெய்டில் ஆவணங்கள், ஆயுதங்கள் சிக்கியது. இதில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட குண்டூர் அதிமுக முன்னாள் நிர்வாகி டிடி கிருஷ்ணன் மீது மக்கள் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்துள்ளனர். துவரங்காபுரி 9 வீட்டுமனைகளை தனக்கு சொந்தமானது என கிருஷ்ணன் வேலிபோட்டதால், நிலத்தை வாங்கிய மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும், கிருஷ்ணன் மிரட்டுவதாகவும் கூறுகிறார்கள். கிருஷ்ணன் விற்ற வீட்டுமனையை வாங்கி வீடு கட்டியதும், பொதுபாதை என்று சொன்ன இடத்தில் வேலி போட்டுவிட்டார் எனவும் இப்போது 2 கிலோ மீட்டர் சுற்றிச் செல்வதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.