தன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 44 மாமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய விவகாரம் குறித்து நெல்லை மேயர் சரவணன் விளக்கமளித்துள்ளார். அதில் 32 உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு உள்ளதாகவும், பல மாமன்ற உறுப்பினர்கள் அக்கடிதத்தில் கையொப்பமிடவில்லை என கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் பலரது கையொப்பம் போலியாக போடப்பட்டு தலைமைக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.