அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கலைசங்கர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வந்தார். இவர், அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக குற்றப்பிரிவு போலீசாரிடம் பலர் புகார் அளித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, கலைசங்கர் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், துறை ரீதியான விசாரணையும் மேற்கொண்டு, மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததால், பணி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பலரிடம் 77 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததும், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சொகுசு பங்களாவுடன் கூடிய தோப்பு வாங்கியதும் தெரிய வந்தது. இதையடுத்து, கலைசங்கரை போலீசார் கைது செய்தனர்.