கோவையில் குடும்பத்தோடு காரை அடித்து சென்ற காட்டாறு வெள்ளம்.. காரை மீட்க முடியாத சூழல்

Update: 2024-10-23 05:48 GMT

கோவையில் குடும்பத்தோடு காரை அடித்து சென்ற காட்டாறு வெள்ளம்.. காரை மீட்க முடியாத சூழல்

கோவை பெரியநாயக்கன்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையிலிருந்து இரவு 12 மணி வரை கன மழை பெய்த நிலையில் கோட்டை பிரிவு பகுதியில் உள்ள ஏழு எருமை பள்ளத்தில் திடீர் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதில் மத்தம்பாளையம் அருகே கோட்டை பிரிவு பகுதி சேர்ந்த ரவி மற்றும் அவரது இரு குழந்தைகள் மருத்துவமனை சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது காற்றாண்டு வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

அதேபோல் அருகில் இருந்த டாஸ்மாக் கடைக்கு வந்த நபர்கள் நிறுத்தி வைக்கப்பட்ட வேன்-னும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனைப் பார்த்து அந்த பகுதி பொதுமக்கள் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலையும் ஏழு எருமை பள்ளத்தில் மழை நீர் பாய்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் தற்போதும் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட கார்களை எடுக்க முடியவில்லை. மேலும் அந்த வழியாக யாரும் செல்ல வேண்டாம் என்று பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எச்சரிக்கையை யாரும் பொருட்படுத்தாமல் வாகனங்கள் அந்த வழியாக சென்று வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்