"வினையில் முடிந்த விளையாட்டு" |நீர் சேமிப்பு தொட்டியில் நடந்த விபரீதம் |சோகத்தில் மூழ்கிய உறவினர்கள்

Update: 2024-01-21 12:24 GMT

சென்னை சின்னமலை எல்.டி.ஜி சாலையை சேர்ந்த லூர்து ராஜ் என்பவரின் 7 வயது மகன் ஆருண் ராஜ், சக நண்பர்களுடன் இணைந்து தெருவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பந்தானது, அருகே உள்ள வீட்டின் நீர் நீர் சேமிப்பு தொட்டியில் கிடந்ததால், அதை எடுக்க முயன்றபோது, சிறுவன் தவறி நீர் தொட்டியில் விழுந்துள்ளார். இதில், சிறுவன் நீரில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக சக சிறுவர்கள் அளித்த தகவலின் பேரில், நீர் தொட்டியில் கிடந்த சிறுவனை, அப்பகுதி மக்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். மகனை பறிகொடுத்த தாய், கதறி அழுதது வேதனை அளித்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்