உயிர்களை காவு வாங்கிய குவாரி வழக்கு.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2024-11-15 12:57 GMT

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை, இலங்கிப்பட்டி பகுதியில் கைவிடப்பட்ட குவாரிகளில் விழுந்து இருவர் உயிரிழந்த நிலையில், அதனைச் சுற்றி வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி ஸ்டாலின் என்பவர்

உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். கைவிடப்பட்ட குவாரிகளை கனிம வள சட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியுள்ளார். உயிரிழப்புகளுக்குக் காரணமான சட்டவிரோத குவாரிகளை நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மரிய

கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் கைவிடப்பட்ட குவாரிகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. கைவிடப்பட்ட குவாரிகளை சீரமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து

கனிம வளத்துறையின் செயலர், மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 9க்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்