சிதம்பரம் நடராஜர் கோவில்.. "எவரும் கை வைக்க முடியாது" - ஐகோர்ட் எச்சரிக்கை

Update: 2023-12-14 03:05 GMT

புராதன கோவிலில் எவரும் கை வைக்க அனுமதிக்க முடியாது என, சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் எந்த அனுமதியுமின்றி நடைபெறும் கட்டுமானங்களுக்கு தடைவிதிக்க கோரி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புராதன கோவிலில் எவரும் கைவைக்க அனுமதிக்க முடியாது என்றும், வேறு நோக்கத்தில் யாரும் கைவைத்தால் அவர்களை இந்த நீதிமன்றம் தடுக்கும் என்றும் எச்சரித்தது. மேலும் உண்டியல் இல்லாத நிலையில் கோவிலுக்கு வரும் நன்கொடைகள் எவ்வாறு கையாளப்படுகிறது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு வசூலிக்கும் தொகைக்கு உரிய ரசீது வழங்கப்படுவதாக, பொது தீட்சிதர் குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இது தொடர்பாக ஒரு வாரத்தில் பொது தீட்சிதர்கள் குழு விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், டிசம்பர் 20ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்