"ஸ்கேன் செய்தால் ஹிஸ்டரியே கொட்டும்" - புது யுக்தியை கையில் எடுத்த போலீஸ்

Update: 2024-04-26 06:30 GMT

குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் விபரங்களை எளிதாக கண்டறிய சிதம்பரம் நகர போலீசார் கியூஆர் கோர்டு முறையை அறிமுகப்படுத்தி உள்ளனர். கஞ்சா கடத்தல், திருட்டு, மதுபோதையில் ஒட்டிய வாகனங்கள் என 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குற்றவழக்கு தொடர்பான வாகனங்களின் விபரங்களை கணினியில் பதிவேற்றம் செய்து அதிலிருந்து கியூஆர் கோடு ஸ்டிக்கர் தயாரித்து அதை இருசக்கர வாகனத்தின் முன்புறம் ஒட்டி வைத்துள்ளனர். இதனால், வாகனம் பறிமுதல் செய்யப்பட்ட விபரம், குற்ற எண் உள்ளிட்ட விபரங்களை கியூஆர் கோடை ஸ்கேன் செய்து கண்டறிய முடிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்