சென்னை, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில், பழிக்குப்பழி வாங்கும் நடவடிக்கையாக இரு தரப்பினர் அரிவாளால் வெட்டி மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி ராஜேஸ்வரி என்பவர் கடந்தாண்டு 5 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். தங்கையின் தகாத உறவை கண்டித்தால், தங்கையின் காதலனாலையே ராஜேஸ்வரி கொல்லப்பட்ட இந்த சம்பவத்தில், 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்ட அனைவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பழிக்குப்பழி வாங்கும் நோக்கில் காத்திருந்த ராஜேஸ்வரியின் ஆதரவாளர்கள்... சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் வைத்து ஜாமினில் வெளியே வந்தவர்களை மறித்து அரிவாளால் வெட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மாம்பலம் ரயில் நிலையம் அருகேயும் ஒருவரையொருவர் அரிவாளால் வெட்டி இரு தரப்பும் மோதிக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.