விடிந்ததும் அதிர்ந்த சென்னை.. செல்போனில் பதிவான பகீர் காட்சிகள்

Update: 2024-10-10 03:26 GMT

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அதிகாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. சென்னையில் வேளச்சேரி, பெருங்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

அடையாறு,மந்தவெளி, ராயப்பேட்டை, வடபழனி,ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. ஒருசில இடங்களில் தோண்டப்பட்டிருந்த குழிகளில், லாரிகள் மூலம் மண்ணை கொண்டு வந்து நிரப்பும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்