அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 11 பேர் மீது வழக்கு - உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு

Update: 2024-02-17 02:13 GMT

தமிழக அரசை கண்டித்து கடந்த 2023-ம் ஆண்டு கரூர் வேலுசாமிபுரத்தில், அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 11 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டது. கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, 11 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்