வெள்ளத்தால் பாதித்துள்ள சென்னை உதவும் கோவை - கோடிக்கணக்கில் நிவாரண பொருட்கள்
வெள்ளத்தால் பாதித்துள்ள சென்னை மக்களுக்காக கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை 22 லாரிகள் மூலம் சுமார் இரண்டரை கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், 5 விமானங்கள் மூலம் சுமார் 8 டன் பால் பவுடர் மற்றும் மருந்து பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.