பல லட்சம் செலவில் செய்யப்பட்ட விநாயகர்.. மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு செதுக்கிய சிலைகள்

Update: 2024-09-07 16:02 GMT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஓசூர் பகுதியில் பிரம்மாண்ட செட்டுகள் அமைத்து விநாயகர் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓசூர் ஸ்ரீநகரில், அப்பகுதி இளைஞர்கள் குழுவினர், சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் பெங்களூருவில் இருந்து சினிமா செட் அமைக்கும் கலைஞர்களை அழைத்து வந்து சென்னை உயர் நீதிமன்றம் போல பிரம்மாண்டமாக விநாயகர் செட் அமைத்துள்ளனர். இந்த நீதிமன்றத்தில், நீதிபதியாகவும், டவாலி, கிளர்க் மற்றும் வழக்கறிஞர்கள் காவலர்கள் என 14 விநாயகர்கள், நீதி பரிபாலனை செய்யும் வகையில் விநாயகர் சதுர்த்தி செட் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளி கூண்டில் எலி வாகனம், கோர்ட் வளாகத்தில் காந்தி சிலை, போலீசார் மற்றும் குற்றவாளிகளை அழைத்து செல்லும் வாகனம், கோர்ட்டு வளாகம் என ஒரு நீதிமன்றத்தில் இருப்பது போல தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஓசூர் பொதுமக்கள் பார்த்து ரசித்து விநாயகரை தரிசனம் செய்து செல்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்