சென்னைக்கு படையெடுக்க தொடங்கிய மக்கள்
நெல்லை வழியாக சென்னை நோக்கி செல்லும் அந்தியோதயா ரயிலில் கணிசமான கூட்டம் காணப்பட்டது. தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் திரும்பிய பொதுமக்கள், மீண்டும் சென்னை நோக்கி திரும்புவதால் இத்தகைய கூட்டம் காணப்படுகிறது. நாளை இதைவிட அதிகமாக கூட்டம் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் பொதுமக்களால், பெருங்களத்தூர் மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர் விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றிருந்த பொதுமக்கள் மீண்டும் சென்னை நோக்கி திரும்ப துவங்கியுள்ளனர். இதனால், செங்கல்பட்டு - தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, வந்த வண்ணம் உள்ள வாகனங்களால், பெருங்களத்தூர் மேம்பாலத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.