சென்னையில் கடலும் ஆறும் இணையும் புள்ளியில் துடிதுடித்த அப்பா - நேரில் பார்த்து கதறிய மகன்
சென்னையில் கடலும் ஆறும் இணையும் புள்ளியில் துடிதுடித்த அப்பா - நேரில் பார்த்து கதறிய மகன்
சென்னை பட்டினம்பாக்கத்தில் சிறிய ரக படகில் இருந்து தவறி கடலில் விழுந்த மீனவர் குமரன் உயிரிழந்தார். முகத்துவாரம் பகுதியில் தனது பத்து வயது மகனுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர், திடீரென நிலைதடுமாறி கடலில் விழுந்தார். சிறுவனின் கூச்சலை கேட்டு அங்கு ஓடி வந்த மீனவர்கள், கடலில் இறங்கி மீனவரை தேடினார்கள். இன்று காலை மீனவர் குமரனின் உடல் மீட்கப்பட்டது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர்.