குலுங்க போகும் மதுரை... வந்தது எதிர்பார்த்த அறிவிப்பு | Madurai | jallikattu
குலுங்க போகும் மதுரை... வந்தது எதிர்பார்த்த அறிவிப்பு
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறும் என விழாக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அழைப்பிதழை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் வெளியிட்டுள்ளது. வரும் 16ஆம் தேதி தமிழர்களின் வீர விளையாட்டான அலங்காநல்லூர் ஜல்லிகட்டு விழாவானது சீரும் சிறப்புமாக நடைபெற இருப்பதால் இளைஞர்களும் ,பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க அன்புடன் அழைப்பதாக அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.