காவல் நிலையத்தில் கண்ணாடியைக் குத்திக் கொண்டு த*கொலைக்கு முயன்ற ரவுடியால் பரபரப்பு ஏற்பட்டது.கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்த புகாரில் ராயபுரம் பகுதியைச் சேர்ந்த ரவுடி அரவிந்தனை
போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.அப்போது அரவிந்தன் காவல் நிலையத்தில் இருந்த கண்ணாடியை உடைத்து கழுத்தில் குத்திக் கொண்டு த*கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டதில் லேசான காயம் என தெரியவந்தது.தொடர்ந்து ரவுடி அரவிந்தனை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.