சென்னை மெரினா கடற்கரை வரை நீந்தி சாதனை படைக்கும் பயணத்தை மேற்கொண்டுள்ள சிறப்பு குழந்தைகள் தரங்கம்பாடி வந்தடைந்தனர். இந்த பயணயத்தில் 15 சிறப்பு குழந்தைகள், பயிற்சியாளர்களுடன் பங்கேற்றுள்ளனர். வருகிற15-ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை பகுதியில் தங்கள் சாதனையை நிறைவு செய்ய உள்ளனர். பெற்றோர்கள், மருத்துவக்குழுவினர் ஆகியோர் பைபர் படகில் உடன் சென்று அவர்களை உற்சாகப்படுத்தி அழைத்துச் செல்கின்றனர்.