சென்னை குன்றத்தூர் அருகே பழந்தண்டலம் பகுதியில் உள்ள புறக்காவல் நிலையம் பூட்டப்பட்டு பயன்பாடு இல்லாமல் உள்ளது. இதனால் அங்கு செடிகள் வளர்ந்து, சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே புறக்காவல் நிலையத்தை மீண்டும் போலீசார் பயன்படுத்தி சோதனையில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.