சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூரை சேர்ந்தவர்கள் முகாஜித் அகமது மற்றும் பினாசுருபி. இவர்களுக்கு, ஐசித் அகமது என்ற மகனும், 3 மாத பெண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில், கானத்தூரில் இருந்து சென்னைக்கு சொந்த வேலையாக சென்று வீடு திரும்பியபோது பனையூர் அடுத்த உத்தண்டியில் முகாஜித், தன் குடும்பத்தினருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் நான்கு பேரும் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மனைவி பெனாசுருபி, 3 மாத பெண் குழந்தையான ஆசியா அகமது இருவரையும் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள், அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.