திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பல்... தந்தைக்கு கொலை மிரட்டல் - மகளுக்கு பாலியல் தொல்லை | Chennai
சென்னை மயிலாப்பூர் 124வது வார்டு கவுன்சிலர் விமலாவின் கணவர் கிருஷ்ணமூர்த்தி மீது ஏற்கனவே நில மோசடி உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கும் அவரது சகோதரர் உமா மகேஷ்வரனுக்கும் இடையே சொத்து பிரச்சினை உள்ள நிலையில், இதில் உமா மகேஷ்வரனுக்கு உதவியாக இருந்ததாக அடியாட்களுடன் முதியவர் ஒருவரை வீடுபுகுந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததோடு, அவரது மாற்றுத்திறனாளி மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. அதனை படம்பிடித்து மிரட்டுவதாக அளிக்கப்பட்ட புகாரில் கிருஷ்ணமூர்த்தி மீது 6க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சகோதரர் கிருஷ்ணமூர்த்தி மீது மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் உமா மகேஷ்வரன் புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த திமுக கவுன்சிலர் விமலா, கணவர் கிருஷ்ணமூர்த்தி தலைமறைவானதாக கூறப்படுகிறது.