சென்னையில் திசை மாறிய தமிழ்நாடு மாணவர் காங். போராட்டம்.. போலீஸ் நிறுத்தியதால் பரபரப்பு
சென்னை அண்ணா சாலை தர்கா எதிரில் அக்னிபாத் திட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், தமிழக ஆளுநரின் மக்கள் விரோத போக்கையும் கண்டித்தும், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் கோபண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலையை நோக்கி செல்லவே, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, அக்னிபாத் திட்டத்தால் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் மாணவர்கள் வேலை வாய்ப்பை இழப்பாதாக கூறினார்.