வட சென்னையில், இ-சிகரெட்டை விற்பனை செய்துவந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை, பர்மா பஜாரில் தடைசெய்யப்பட்ட இ-சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக, காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில், பல்வேறு கடைகளில் இருந்து, சுமார் முப்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள, ஆயிரத்து 300 இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவற்றை விற்பனை செய்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.