கண்ணீர் விட வைக்கும் சென்னை ஆட்டோ ஓட்டுனர்களின் பாசம்... "அந்த மனசுதான் சார் கடவுள்"
சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் பரங்கிமலை ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் 13 ஆண்டுகளாக சுற்றி திரிந்த நாய் திடீரென இறந்து போனது . இதனால் துக்கத்திற்கு ஆளான ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை ஓட்டவில்லை.
சைக்கோ என பெயரிட்டு பாசமாக வளர்த்து வந்த நாய் திடீரென இறந்து போனதால் அதற்கு உரிய இறுதி சடங்குகளை செய்து நாயின் உடலை ஊர்வலமாக கொண்டு சென்று அருகில் உள்ள காலி மனையில் புதைத்தனர்.