பாஜக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழும் என, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அதானியின் பங்குச்சந்தை மோசடிகள் குறித்து ஹிண்டன் பார்க் அளித்த அறிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி, சென்னை சாஸ்திரி பவன் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, அதானி பாங்குகள் செயற்கையாக உயர்கிறது என்றும், ஊழலுக்கு துணை போனவரிடம் செபி தலைவர் பதவியை பிரதமர் மோடி வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டினார்.