பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிடம் 2 மணி நேரத்திற்கு மேலாக சிபிஐ தீவிர விசாரணை
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிடம் இரண்டு மணி நேரத்திற்கு மேல் சிபிஐ நடத்தி வந்த விசாரணை நிறைவு பெற்றது. ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவிடம் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வந்த நிலையில் , 2 மணி நேரங்களுக்கு மேல் நடைபெற்ற விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கில் நேற்று லாலுவின் மனைவி ராப்ரி தேவியிடம் பாட்னாவில் வைத்து விசாரணை நடந்த நிலையில் இன்று லாலு பிரசாத் யாதவிடம் விசாரணை நடத்தப்பட்டது
சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லாலுவின், இரண்டாவது மகள் ரோகிணி ஆச்சார்யா தமது டிவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.