சுடலை மாடன் கோவில் அருகே கொடூர கொலை - மாதக்கணக்கில் காத்திருந்து கருவறுத்த பகை

Update: 2023-09-01 00:00 GMT

நெல்லை, பாளையங் கோட்டை அருகே மூளிக்குளத்தை சேர்ந்தவர்... கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்த நிலையில், குறுகிய காலத்திலே பாஜக மாவட்ட இளைஞரணியின் பொது செயலாளராக வளர்ச்சி...ஜெகன் மீது காவல்நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், இந்த வழக்குகளும்... மூளிக்குளம், சுடலை மாடசாமி கோயிலின் மேல்மட்ட நிர்வாக பதவியுடன், பாஜக கட்சி அந்தஸ்தும் ஜெகனை செல்வாக்குமிக்க ஆளாகவே காட்டியிருக்கிறது...வரப்போகின்ற தேர்தலில் ஜெகனை ஒரு முக்கிய காயாக நகர்த்த கட்சி திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு தயாராக இருந்த ஜெகன் கூடவே தனது ஊரின் நாட்டாண்மை பதவிக்கும் போட்டிபோட தயராக இருந்துள்ளார்... இடம் தான் அவருக்கான முன்விரோதங்களையும், சில எதிரிகளையும் விதைக்க ஆரம்பித்திருக்கிறது...ஜெகனை போலவே பாளையங்கோட்டை பகுதியில் செல்வாக்கு மிக்க ஒரு ஆள்தான் பிரபு... ஜெகனின் திடீர் அரசியல் வளர்ச்சியும், மக்கள் செல்வாக்கும் பிரபுவுக்கு பிடிக்கவில்லை எனவும், இது இருவருக்குமிடையேயான பகையை வளர்த்து முன்விரோதத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது...

இந்நிலையில்தான், மூளிக்குளம் சுடலை மாடசாமி கோயிலின் கொடை திருவிழா நடைபெற்றுள்ளது... திருவிழாவில் விக்கி என்ற இளைஞர் நன்கு குடித்து விட்டு, ஆட்டம் போட இதனால் சிலருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது... உடனே, கோயில் நிர்வாகிகளில் முக்கிய ஆளான ஜெகன், பெரும் சிரமத்திற்கு மத்தியில் கோயில் திருவிழாவுக்கு அனுமதி வாங்கியிருப்பதாகவும், முறையாக நடந்து கொள் என இளைஞர் விக்கியை கண்டித்ததாக கூறப்படுகிறது.. இந்த சம்பவம் நடந்ததோ, ஏப்ரல் - மே மாத காலகட்டம். கிட்டதட்ட மாதக்கணக்கில் ஜெகன் மீது ஆத்திரத்தில் இருந்த விக்கி, 3 மாதம் கழித்து அரங்கேறியிருக்கும் சம்பவம் நெல்லையை ஸ்தம்பிக்க செய்திருக்கிறது.தனது நண்பர்களுடன், மூளிக்குளம் சுடலை மாடசாமி கோயில் அருகே இரவு பேசிக்கொண்டிருந்த ஜெகனை, விக்கியும் அவரது நண்பர்களும் திடீரென சுற்றி வளைத்ததாகவும், தாங்கள் கொண்டு வந்த அரிவாளால் அவரை வெட்டி கொன்று பழிதீர்த்தாகவும் கூறப்படுகிறது..கோயில் அருகே ஜெகன் சடலமாக கிடப்பதை கண்டு உறைந்து போன உறவினர்கள், போலீசில் தகவல் தெரிவித்தனர்... சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜெகனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ஜெகனின் உறவினர்களும், பாஜக கட்சியினரும் திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய வேண்டும் எனவும் வற்புறுத்தினார்....

Tags:    

மேலும் செய்திகள்