62 பேரை காவு வாங்கிய விமான விபத்து - குலை நடுங்கவைக்கும் பகீர் காட்சி

Update: 2024-08-10 02:19 GMT

பிரேசிலில் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம், விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்ததில், அதில் பயணம் செய்த 62 பேரும் உயிரிழந்தனர்.

பிரேசிலின் பரானா மாகாணத்தில் உள்ள காஸ்காவல் நகரில் இருந்து, சாவ் பாவ்லா மாகாணத்தில் உள்ள குருல்ஹாஸ் நகருக்கு அந்த விமானம் சென்று கொண்டிருந்து. வியோபாஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த விமானத்தில் 4 விமான ஊழியர்கள், 58 பயணிகள் என மொத்தம் 62 பேர் பயணம் செய்தனர். வின்ஹெடா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது விமானம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து, குடியிருப்புகள் நிறைந்த பகுதி மீது விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்ததும் வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்ததால் அதில் பயணம் செய்தவர்கள் பிழைத்திருக்க வாய்ப்பிலை என்று தெரிகிறது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து அறிந்த பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டாசில்வா, ஆழ்ந்த இரங்கரை தெரிவித்தார். தெற்கு பிரேசிலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், குறித்து தகவல் வந்ததும், அங்கிருந்தவர்களுடன் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்