இந்த மாதத்தில் பிரம்ம உற்சவம் நடைபெறுமா? முழு விவரம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சன்னத்திக்கு, மே 24ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பிரம்ம உற்சவம் நடத்த அறநிலையத்துறை ஏற்பாடு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரனையில், "பிரம்மோற்சவம் நடத்துவதால், நடராஜர் கோவிலின் ஆறு கால பூஜைகளுக்கு சிக்கல் ஏற்படும்" என தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மரபு, சட்ட விதிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறி, வழக்கு விசாரணையை ஜூன் 24 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இதன்மூலம் இந்த மாதத்தில், பிரம்ம உற்சவம் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.