"நீ இப்ப இந்தி பேசியே ஆகனும்" - பெங்களூருவில் ரத்தம் தெறிக்க தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்

Update: 2024-09-12 04:59 GMT

பெங்களூருவில் இந்தியில் பேச வற்புறுத்தி கன்னட தொழிலாளியை உத்தரபிரதேச தொழிலாளர்கள் தாக்கியதாக புகார் எழுந்தது. ஆனேக்கல்லில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சிவலிங்கா என்பவருக்கு இந்தி தெரியாததால், உத்தரபிரதேசத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களுடன் கன்னட மொழியில் பேசி வந்துள்ளார். இந்த சூழலில், இந்தியில் பேச வற்புறுத்தி வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் தாக்கியதில் சிவலிங்கா தலையில் காயமடைந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்