10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் கவனத்திற்கு.. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

Update: 2023-12-14 12:56 GMT

விடைத்தாள், மறு மதிப்பீட்டில் குறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களைப் போன்று 10ஆம் வகுப்பு மாணவர்களும் விடைத்தாள் நகல் பெற முடியும் என பள்ளிகல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், மறுமதிப்பீட்டின்போது, விடைத்தாளில் அதிக குறைபாடுகள், சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்பது தெரியவந்தால் , சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதி அற்றவர்கள் என கூறப்பட்டுள்ளது. மறு மதிப்பீடு செய்து அறிவிக்கும் மதிப்பெண்களே இறுதியானது என்றும் மறுமதிப்பீட்டில் மதிப்பெண்கள் குறைந்தால், பழைய மதிப்பெண்கள் மீண்டும் வழங்க இயலாது எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்