"ஏன் இன்னும் கொடுக்கல?" - அண்ணாமலை கேள்வி

Update: 2023-08-08 02:07 GMT

தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான சீருடை, காலணிகள் உள்ளிட்டவை உடனடியாக வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை, காலணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் மாணவர்களுக்கான சீருடை ஒன்று மட்டுமே வழங்கியிருப்பதாகவும் நாளிதழில் செய்திகள் வந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் முக்கியப் பணிகளில் ஒன்றான, மாணவர்களுக்கான உபகரணங்கள், குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை ஏன் உறுதி செய்யவில்லை? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்