உடல் நலம் குன்றியவரை மீட்க சென்ற "ஆம்புலன்ஸ்" - விடாமல் தடுத்து நிறுத்திய... - தலைகீழான நிலை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தேங்கிய மழைநீரால் 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடல்நலம் குன்றிய ஒருவரை மருத்துவமனை அழைத்து செல்ல ஒட்டர்பாளையம் பகுதிக்கு ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. அப்போது போகும் பாதையில் மழைநீர் தேங்கியிருந்தது. அதில் ஆம்புலன்ஸின் சக்கரம் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருந்ததால், டிராக்டர் மூலம் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது. அதன்பின், ஆம்புலன்ஸ் உடல்நலம் குன்றியவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மழைநீர் தேங்கியதால் உடல் நலம் குன்றியவரை மீட்பதற்கு சுமார் ஒருமணிநேரம் காலதாமதம் ஆனது கவலையை ஏற்படுத்தியுள்ளது.