வேலைவாய்ப்பின்மையின் கோரமுகம்..ஏர் இந்தியா நடத்திய இன்டர்வியூவில் நாட்டையே அதிரவிட்ட காட்சிகள்
வேலைவாய்ப்பின்மையின் கோரமுகம்..ஏர் இந்தியா நடத்திய இன்டர்வியூவில் நாட்டையே அதிரவிட்ட காட்சிகள்
ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனம், 2 ஆயிரத்து
216 காலியிடங்களுக்கு, மும்பையில் வாக்கின் முறையில்
நேர்முகத் தேர்வு நடத்தியது. இதில் கலந்துகொள்ள 25
ஆயிரம் பேர் குவிந்ததை அடுத்து, கூட்ட நெரிசல்
ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால்,
விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை
பெட்டியில் போட்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக்
கொள்ளப்பட்டனர். ஆட்சேர்ப்பு செயல்முறை தவறாக
நிர்வகிக்கப்பட்டது என ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீசஸ்
நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. நேற்று நடந்த இந்த
சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரல்
ஆகி வருகிறது.