பஜாருக்குள் விரட்டி விரட்டி கடித்த வெறிநாய்... 15 பேர் காயம்

Update: 2023-12-08 11:05 GMT

தேனி மாவட்டம், வருசநாடு கிராமத்தில் வெறி நாய் கடித்து 5 பெண்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்தனர்.

வருசநாடு கிராமத்தில் வெறி நாய் ஒன்று திடீரென பஜார் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்கள் அனைவரையும் கடிக்க தொடங்கியது. இதில், 5 பெண்கள் உட்பட 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள், அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில், வெறிநாயானது அப்பகுதியில் உள்ள தெரு நாய்களையும் கடித்ததாகவும், இதனால் அவைகளும் வெறிநாய்களாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்