சக்திவாய்ந்த நேட்டோவில் இணையும் 32ம் நாடு.. ஆதரவாக 188.. எதிராக 6.. உற்றுநோக்கும் உலகம்

Update: 2024-02-27 07:01 GMT

நேட்டோ அமைப்பில் ஸ்வீடன் இணைவதற்கு, ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஹங்கேரியின் புத்தபெஸ்ட் நகரில் உள்ள நாடாளுமன்றத்தில் இதற்கான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், ஸ்வீடன் இணைவதற்கு ஆதரவாக 188 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 6 பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். இதன் மூலம், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன், நேட்டோ அமைப்பில் ஸ்வீடன் இணைவதற்கு ஹங்கேரி நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த‌து. இதன் மூலம், ஆதரவு பெருகி வருவதால், நேட்டோ அமைப்பில் 32ஆவது நாடாக ஸ்வீடன் இணையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்